தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் முடிவு சய்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள யோகன் பாதரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர், உப தலைவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பசீர் காக்கா, யோகன் பாதர் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வது பற்றி ஆராயப்பட்டதாக அருண் தம்பிமுத்து தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.