இலங்கை தமிழ் இரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராசாவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சு நடத்தினார்.
நேற்று (7) இரவு இந்த சந்திப்பு நடந்தது.
மாவிட்டபுரத்திலுள்ள மாவை சேனாதிராசாவின் இல்லத்துக்கு ரணில் விக்கிரமசிங்க சென்று பேச்சு நடத்தினார்.
முன்னதாக, இந்த சந்திப்பு பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று காலையில் மாவை சேனாதிராசாவை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியது. “இன்று (நேற்று) மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உங்கள் வீட்டுக்கு வருகிறாரா?“ என தமிழ் பக்கம் வினவிய போது, “அப்படித்தான் சொன்னார்கள். இன்று மதியம் தொடர்பு கொள்ளுங்கள். சொல்கிறேன்“ என்றார்.




