நாமலின் கூட்டத்துக்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் சென்றவர்கள் கைது!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் வெலிமடை நகரில் நடைபெற்ற பேரணிக்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பாதுகாப்பிற்காக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த சந்திப்பின் போது, ​​ஊவாபரணகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் கூட்ட மண்டபத்திற்குள் நுழைய முற்பட்டதையடுத்து, அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் பண்டாரவளை விசேட குற்றப்பிரிவு பொலிஸார் சோதனையிட்டனர்.

இளைஞர்களிடம் பிளாஸ்டிக் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கூட்ட அரங்கில் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக இளைஞர்கள் தெரிவித்ததாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்