இரண்டு மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் ஆஜராவதற்காக 4.45 மில்லியன் ரூபா பெற்றுக் கொண்ட நிலையில் இரு வழக்குகளில் ஆஜராகாத சட்டத்தரணி ஒருவரை உடனடியாக சட்டத்தரணிப் பணியிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவருக்கு இழப்பீடு தொகையாக மூன்று மாதங்களுக்குள் அந்தந்த வழக்குகளின் வாடிக்கையாளரான பௌத்த பிக்குவுக்கு ரூ.3 மில்லியன் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த சரத் விஜேசிறி டி சில்வா என்ற நபரே சட்டத்தரணி தொழிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டிய ஸ்ரீ சுகத வர்தனராம புராண விகாரையைச் சேர்ந்த வெல்லவ ஸ்ரீ சந்திரானந்த தேரர் இரண்டு சத்தியக் கடதாசிகள் மூலம் அவருக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டபோதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




