கொம்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கரைச்சி பிரதேச
சபை வருமான உதவியாளர்கள் இருவர் இன்று(03) கையும் மெய்யுமாக கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரும் இலஞ்சம் வாங்குவதாக
ஆணைக்குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கிளிநொச்சிக்கு விஜயம்
மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் குறித்த வருமான வரி
உத்தியோகத்தர்கள் இருவரையும் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து
கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் ஆணைக்குழு அதிகாரிகளால்
கொழும்புக்கு கொண்டு செல்லப்படடுள்ளனர்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது கைது செய்யப்பட்டதனை உறுதிப்படுத்திய அவர் மேலதிக தகவல் எதுவும் தனக்கு தெரியாது என பதிலளித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1