சிறிதரன் செய்தால் குற்றமில்லை… சுமந்திரன் செய்தால்த்தான் குற்றம்: விளக்கமில்லாமல் உளறிய வட்டிக்கடை ஜீவன்!

Date:

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என விளக்கமில்லாமல் பேசியுள்ளார் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் சிறிதரன் அணி உறுப்பினருமான வட்டிக்கடை ஜீவன் என அழைக்கப்படும் சண்முகம் ஜீவராஜ்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சிக்காலத்தில் 1000 விகாரை அமைக்க சஜித் பிரேமதாச நிதியொதுக்கினார். அதன் பின்னர் 2019 ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது, வட்டிக்கடை ஜீவனின் அணித்தலைவரான சி.சிறிதரன் உள்ளிட்டவர்களும் சஜித்தையே ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்