சுன்னாகம் பொலிசாரால் தனது கணவன் இரவு நேரம் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக பெண்ணொருவர் குற்றம்சாட்டியிருந்தார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று (2) பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை பொலிஸ் வட்டாரங்கள் மறுத்துள்ளன.
சுன்னாகம் பிரதேசத்தில் அண்மையில் நடந்த குற்றச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்திலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
வீதியால் சென்ற இரண்டு நபர்களை வழிமறித்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது, ஒருவரின் 3 விரல்களும் துண்டாடப்பட்டுள்ளன.
தாக்குதலை நடத்திய குழுவில் இருந்தவர்களின் விபரங்களை பாதிக்கப்பட்டவர்கள் வழங்கியதன் அடிப்படையில், குறிப்பிட்ட நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியலில் வைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.