திருகோணமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோணேச்சர ஆலயத்தின் இதுவரை நிர்மாணிக்கப்படாத கோபுரம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார்.
நேற்று (31) திருகோணமலையில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்-
இந்துக்களின் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோணேஸ்வர ஆலயமானது உலக இந்துக்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆலயம் என்பதுடன் இந்த திருககோணேஸ்வர ஆலயத்தின் கோபுரமானது இதுவரை காலமும் நிர்வாணம் செய்யப்படாமல் உள்ளது எனவே குறித்த திருக்கோனேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் நிர்மாணிப்பதற்கான பொறுப்பை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனவும் குறித்த ஆலயத்தின் கோபுரத்தை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார்.
மேலும் இதனை தெரிவிக்கும் போது எனக்கு காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார் சம்பந்தன் அவர்கள் தொடர்ந்து என்னை வலியுறுத்தி வந்தார். திருகோணமலை நகரை பெரிய அளவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என அவருக்கு நான் வாக்குறுதியளித்திருந்தது எனக்கு ஞாபகம் வந்தது,
எனவே நாங்கள் வாக்குறுதியளித்தால் அதை நிறைவேற்றியே தீருவோம். திருகோணமலையில் அமைந்துள்ள சேருவில விகாரையின் புனர்நிர்மான பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சேருவில விகாரை புனரமைக்கப்படும்.
ஆசியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகமான திருகோணமலை இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் செய்யவில்லை எனவும் எதிர்வரும் காலங்களில் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து திருகோணமலையில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் “மாற்றத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் அனைத்தும் மீழப்பெறப்பட்டது. அவைகள் தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஊடாக நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலை வரை குழாய் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு மாற்றப்படும். அதன் பிற்பாடு திருகோணமலை ஒரு பலம் பொருந்திய இடமாக மாற்றமடையும்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலபதி, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-