24.5 C
Jaffna
February 19, 2025
Pagetamil
இலங்கை

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையர் குற்றவாளியென அறிவிப்பு!

கோடரியால் தனது மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கையர் தினுஷ் குரேரா, அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி நெலோமி பெரேராவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சுமார் ஒரு மாத காலம் நீடித்த நிலையில், தற்காப்புக்காகவே தனது மனைவியைத் தாக்கியதாக அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 47 வயதான தினுஷ் குரேராவை கொலை செய்த குற்றவாளி என அறிவிக்க விக்டோரியா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 3 மணி நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

டிசம்பர் 3, 2022 அன்று தனது மனைவியைக் கொன்றதை ஒப்புக்கொண்ட தினுஷ் குரேரா, தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறி கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மெல்போர்ன் வீட்டில் நடந்த வாக்குவாதத்தின் போது மனைவி கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், விரலைக் கடித்ததாகவும் விசாரணையின் போது அவர் ஜூரியிடம் கூறினார்.

43 வயதான இலங்கைப் பெண் 35 காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக சட்டத்தரணிகள் ஜூரிக்கு அறிவித்திருந்தனர்.

இந்த மோதலின் போது வீட்டை விட்டு ஓட முயன்ற 17 வயது மகனை தாக்கியதையும் சந்தேக நபர் மறுத்துள்ளார்.

சுமார் நான்கு வாரங்களாக தம்பதியரின் இரண்டு குழந்தைகளின் சாட்சியத்தை கேட்ட விக்டோரியா உச்ச நீதிமன்ற நடுவர் மன்றம் இன்று இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தினுஷ் குரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸார் மத்தியில் நேர்மையை உருவாக்க புதிய நடவடிக்கை

east tamil

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் கைது

east tamil

கனிய மணல் அகழ மக்கள் அனுமதி தேவை – ரவிகரன்

east tamil

இனி வாகனங்கள் வாங்கலாம் – பிரச்சனை தீர்ந்தது

east tamil

விமான எண்ணிக்கையை விரிவாக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டம்

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!