[embedyt] https://www.youtube.com/watch?v=i5VUH4TnJuA[/embedyt]
திருகோணமலை மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு காலப்பகுதிகளில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்கள், தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர். இதற்காக, அவர்கள் நேற்று (17) கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்திக்க முயன்றனர்.
ஆளுநர் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், அவர்கள் தங்களது நிலையை விளக்கி கருத்துத் தெரிவித்தனர். தாங்கள் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடுமையான சேவைகளை வழங்கி வந்தும், இதுவரை நிரந்தர நியமனம் பெறாததைக் கடும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டனர்.
நிரந்தர நியமனத்திற்காக மேற்கொள்ளப்படும் நேர்முகத் தேர்வுகளில் பலமுறை தோற்றிய போதிலும், தங்களது நியமனம் வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.




