பாசிக்குடாவில் கரையொதுங்கிய சடலம்

Date:

மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலையில் மீட்டகப்பட்டுள்ளதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை நாடுமாறு பாசிக்குடா பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்

இதனையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் குறித்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்