நாடளாவியரீதியில் டெங்கு தொற்று அதிகரிப்பு!

Date:

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் 33 வது வாரம் வரை 35,118 தொற்றுக்குகள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 30,575 தொற்றுக்களே பதிவாகியுள்ளன.

இந்த வாரம் மட்டும் 968 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தரவு வெளிப்படுத்துகிறது. முந்தைய வாரத்தில் 917 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகும். நாடு முழுவதும் பதிவான தொற்றுக்களில் 51.3% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. மொத்த நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் உள்ளனர்.

15 சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களை அதிக ஆபத்துள்ள வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கண்டி, கம்பஹா , கொழும்பு, இரத்தினபுரி, காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், கொழும்பு தெற்கு, நாவலப்பிட்டி, ஹரிஸ்பத்துவ, கொலன்னாவ, மற்றும் மஹர ஆகிய பகுதிகளே அபாய பிரதேசங்களாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வியத்தகு முறையில் 133% தொற்றுகள் அதிகரித்துள்ளன, அதே வேளையில் கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட வட மாகாணத்தின் பிற பகுதிகளிலும் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்