இயக்கச்சி விபத்தில் ஒருவர் பலி

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து மோதியதில் மது போதையிலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) இரவு 10.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது, குறித்த நபர் தடக்கி வீழ்ந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்