மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

Date:

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளோற்றால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்  படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இது பற்றி தெரியவருவதாவது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதான புகையிரத நிலையத்து முன்னால் உள்ள கடை ஒன்றில் 16 ஆயிரம் ரூபா திருடிய மற்றும் கடை ஒன்றை உடைத்து திருடிய மற்றும்; திருட்டுச் சம்பவம் உட்பட 3 திருட்டுச் சம்பவங்கள்  தொடர்பாக  குறித்த நபரை கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்ற பிடியாணை பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிசார் நீதிமன்ற பிடிவிறாந்தற்கு கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ம்திகதி ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த குறித்த நபரை வழக்கு விசாரணைக்காக சம்பவ தினமான இன்று திங்கட்கிழமை (20) காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டா

இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் 3ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து குறித்த கைதி தனது கழுத்தையும் கையையும் பிக்கரக சேவிங் பிளோற்றல் வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தனஞ்சே புஸ்பகுமார் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில்  திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில்  இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் இடத்துக்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்