நீரில் மூழ்கியதாலேயே இந்திய மீனவர் உயிரிழந்தார்!

Date:

கடலில் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகினை இலங்கை கடற்படை கைதுசெய்ய முற்பட்ட பொழுது இந்திய படகுடன் இலங்கை கடற்படைப்படகு மோதியதில் இந்திய மீனவரின்படகு கடலில் மூழ்கியது.

இந்நிலையில் குறித்த மீன்பிடி படகிலிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் கடலில் மூழ்கினர்.

இதனையடுத்து மூன்று மீனவர்கள் உடனடியாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதோடு ஒருவர் ஆபத்தான நிலையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மாயமான மற்றுமொரு மீனவரை இந்திய இலங்கை கடற்படை தேடி வருவதாக இலங்கை கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவனால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்நிலையில் குறித்த மீனவர் நீரில் மூழ்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடபட்டுள்ளது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இருவரையும் யாழ் போதான வைத்தியசாலையில் வைத்து யாழ் இந்திய துணை தூதுவர் சாய்முரளி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவரின் சடலம் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்