மஹிந்தவுக்கு இடியாக வந்த செய்தி!

Date:

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போது, ​​பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும், எனவே கட்சியினால் வேறு ஒரு வேட்பாளரை முன்வைத்தால் அது கட்சியின் வாக்காளர் தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே கட்சியில் இருந்து வேறு ஒரு வேட்பாளரை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியுடன் கலந்துரையாடி விரைவில் முடிவெடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

spot_imgspot_img

More like this
Related

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்