ஜனாதிபதித் தேர்தல் செப்ரெம்பர் 21ஆம் திகதி

Date:

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இது தவிர வடக்கில் உள்ள சில பத்து உறுப்பினர்களை கொண்ட தமிழ் கட்சிகளும், 7 தனி நபர்களும் இணைந்து பொது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காலி முகததிடல் போராட்டக்காரர்கள் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடு பிடிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்