மனைவியை மிரட்ட குழந்தையை தாக்கி வீடியோ வெளியிட்ட தந்தை கைது!

Date:

குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்று கொடூரமாக நடத்தப்படுவதாக 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய சமையல்காரர் ஒருவரை எல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேக நபரும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

சந்தேகநபர், குழந்தையின் கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட வைத்த நிலையில், குழந்தை பசிக்காக உணவை கோரியும் தந்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் குழந்தையின் கால் ஒன்றை சைக்கிளின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, குழந்தையை கொடூரமாக நடத்தும் வீடியோக்களை வெளிநாட்டு தாய்க்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்