நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளதாக இன்று (25) சுதந்திர சதுக்கத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்தார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பதிலளித்தார்.