22வது திருத்த வர்த்தமானி ஒத்திவைப்பு!

Date:

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாம் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (18) அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கேட்டபோது, ​​ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், அந்த அச்சத்தைப் போக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்றார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் அண்மையில் குற்றம் சுமத்தியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்