தெல்லிப்பளை சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்- துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு  ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

Date:

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு  ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில்  கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய  ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி  இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல் ஆளுநர் அவர்களால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கெளரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது அறிவிப்புகளை www.np.gov.lk  என்ற வடக்கு மாகாண சபையின்  உத்தியோகபூர்வ  இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.
spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்