மட்டக்களப்பில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் கைது!

Date:

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியும் இளைஞரும் காதலித்து வந்துள்ள நிலையில் கடந்த மே மாதம் அச்சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவர் மூலமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞரையும்,அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இளைஞனின் தாயாரையும் கைது செய்த பொலிஸார் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்