சாவகச்சேரி வைத்தியருக்கு ஆதரவாக களமிறங்கிய யாழ்ப்பாண போலி வைத்தியர்!

Date:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதனை இடமாற்றம் செய்ய வேண்டாமென இன்று நடைபெற்ற போராட்டத்தில், யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய போலி வைத்தியர் ரகுராமும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம், உரும்பிராயிலுள்ள போலி வைத்தியர் ரகுராமின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தி, மக்களின் உயிர்களை காப்பாற்றும் பணியில் யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இதனால் ரகுராம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவை மீறி அவர் அண்மையில் சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் விரைவில் அவர் நீதிமன்றத்தை எதிர்கொள்ள நேரிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ரகுராமும் முன்வரிசையில் நின்றுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா தனக்கிருந்த மக்கள் ஆதரவினால் நிதானமிழந்து பல முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரியுடனான தனிப்பட்ட தொலைபசி உரையாடலையும் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனால், போலி வைத்தியர் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கலாமென கருதப்படுகிறது.

இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவை நியமித்து, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்