இலங்கைக்கு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நாளை மறுநாள் (20) சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் மாலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
இரா.சம்பந்தன் (உதவியாளர் ஒருவரையும் அழைத்து செல்வார்), செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க.வி.விக்னேஸ்வரன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
+1
+1