சம்பந்தனுக்கே விபூதி அடிக்க முயன்ற சிறிதரன்… கிளிநொச்சியில் மாறுவேடத்தில் வந்த கட்சி உறுப்பினர்கள்: விளக்கம் கோர முடிவு!

Date:

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து கிளிநொச்சியில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியினர் நடத்திய கூட்டம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென யாழ்ப்பாண வர்த்தகர் ஒருவரும், அரசியல் கட்சியொன்றும் ஆரம்பித்த பிரச்சாரத்தை தற்போது, சில கட்டுரையாளர்கள் முன்னெடுக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், தற்போது கட்டுரையாளர்கள் தமது புகழுக்காக அதை முன்னெடுப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறப்பட்டது. எனினும், அது சிவில் சமூகமல்ல. இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி கிளையை சேர்ந்தவர்களே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன், சிறிதரன் அணியை சேர்ந்த கிளிநொச்சி, முழங்காவில் பிரதேச வர்த்தகர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டை கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் தவிசாள் வேலமாலிகிதனே மேற்கொண்டார்.

கூட்டத்தில், கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்களான யேசுராசன், வேலமாலிகிதன், கி உ சிவமோகன், சத்தியானந்தன், ஜீவராசா, விக்டர் சாந்தி உள்ளிட்டவர்களும், கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் திருவையாறு வட்டார வேட்பாளராக குறிப்பிடப்பட்ட ரூபிதாசன், கிளிநொச்சி நகர வேட்பாளர் குமரகுரு, கிளிநொச்சி கிளை செயலாளர் விஜயன், கணேசபுர வட்டார அமைப்பாளர் சுதன், திருநகர் வட்டார அமைப்பாளர் சிவபாலன், கட்சியின் கிளிநொச்சி பொருளாளர் அன்பழகி, விளையாட்டு துறை பொறுப்பாலளர் அலன் உள்ளிட்டவர்களும், கட்சி உறுப்பினர்களுமே கலந்து கொண்டனர்.

எனினும், இது கிளிநொச்சி சிவில் சமூகத்துடனான சந்திப்பு என பொய்யான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி இப்போதைக்கு தீர்மானம் எடுப்பதில்லையென நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொதுவேட்பாளர் விவகாரத்தில் யாரும் அவசரப்பட வேண்டாம் என இரா.சம்பந்தன் தெரிவித்த செய்தி, நேற்று முன்தினமும் மத்தியகுழுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சியின் தீர்மானத்தை மீறி, கிளிநொச்சி கிளையினர் செயற்பட்ட விவகாரம், இரா.சம்பந்தனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னணியில் சி.சிறிதரனே இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சி.சிறிதரனிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோருமாறு கட்சித் தலைமைக்கு இரா.சம்பந்தன் தொலைபேசியில் அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு- மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக முதலைகளின்...

யாழில் நேற்று 5 பேர் பலி

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில்...

சேரன் காணாமல் போன ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர்கள் கைது!

இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு, ஒரு வருடத்திற்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்