கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற சிறுமியே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
தந்தை குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீட்டின் முன்புறம் இருந்த முப்பது அடி உயரமான தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் விழுந்தது.




