நளின் பண்டார எம்.பியின் வாகனத்துடன் விபத்துக்குள்ளாகிய இளைஞன் பலி

Date:

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிய இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து, இளைஞரின் பாதுகாவலர்கள் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். விபத்துக்கு முன்னர் குறித்த இளைஞனின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குடும்பத்தாரின் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றிரவு இளைஞனின் உறுப்புகள் அகற்றப்பட்டு மூன்று உயிர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 03ஆம் திகதி காலை இந்த இளைஞன் விபத்தில் சிக்கியுள்ளார். கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில், பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணிகளுக்கோ காயம் ஏற்படவில்லை என்பதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மாத்திரம் காயமடைந்து வட்டுப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்தின் காரணமாக அந்த இளைஞன் தலையில் பலத்த காயம் அடைந்து விபத்து நடந்த நேரம் முதல் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

விபத்து நடந்த போது, ​​அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.

விபத்தின் பின்னர், ரு.நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, 50,000 ரூபா கருணைக் கொடுப்பனவை வழங்குமாறும், 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிடப்பட்டதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்