16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும் முன்மொழிவை அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு தொடர்பாக தேசிய குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு தற்போது கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்றில் அரசும் வேர்ல்ட் விஷன் அமைப்பும் இணைந்து கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.




