இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்து தனி ஈழத்தை பெற்றுக்கொடுங்கள்: மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை

Date:

மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இந்தியாவின் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்ற வருத்தம் உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆள முடியவில்லை. வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை நான் முன் வைக்கிறேன்.

இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவு மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும் . கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும் . இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் .

பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜகத் குறைந்த தொகுதிகள் வெற்றி பெற்றதால் அக்கட்சி தோல்வியடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள். பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என்று கூறி இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பு . அறுபது ஆண்டுகளாக ஆற்றில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற்ற முடிந்தது . பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார். விபூதி பூசி கொள்கிறார் .பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் .எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன் .

பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. அதிமுக கட்டமைப்பு கலையே மேம்படுத்தவில்லை. நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்