வவுனியாவில் பணிப்பாளரின் விடுதியை சுத்தம் செய்த ஊழியர்களை பதம் பார்த்த குளவிகள்!

Date:

வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரின் விடுதியை சுத்தம் செய்த, விவசாய திணைக்கள ஊழியர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வடக்கு விவசாய திணைக்களத்தில் தகுதியான உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையால், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளராக ஓய்வுபெற்ற ஒருவரை வடக்கு விவசாய திணைக்களம் கடந்த ஜனவரியில் நியமித்தது. இருந்தாலும், அந்த நியமனத்துக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. இருப்பினும், அவருக்கு சம்பளம், விடுதி வசதி வழங்கப்பட்டு, கடமை புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், சில நாட்களின் முன்னர் வவுனியாவுள்ள பிரதி விவசாய பணிப்பாளரின் விடுதியை துப்புரவு செய்வதற்காக, அலுவலக நேரத்தில் 2 விவசாய திணைக்கள ஊழியர்களை அழைத்துச் சென்றதாகவும், அவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்கானதாகவும் குறிப்பிடப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்