யாழில் காதலனால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் மரணம்!

Date:

யாழ்ப்பணத்தில் நேற்று (1) காதலனால் தீ வைக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த 45 வயதானஇரத்தினவடிவேல் பவானி என்பவரே உயிரிழந்தார்.

மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியை சேர்ந்த இவர் திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளனர். குடும்பத்தகராறு கரணமாக சில காலமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், பிறிறொரு ஆணுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் யாழ் குருநகர் கொஞ்செஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, காதலன் திடீரென பவானியின் தலையில் பெற்றோல் ஊற்றி அவருக்கு தீ வைத்தார்.

தீயில் எரிந்த பவானி கத்திக் கூச்சலிட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் நின்றவர்கள் விரைந்து செயற்பட்டு, தீயை அணைத்து, பவானியை போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவே அவர் உயிரிழந்தார்.

பவானியை எரித்த காதலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைதானவர் 40 வயதானவர். அவர் பவானியை எரித்துக் கொல்லும் நோக்கத்துடன், திட்டமிட்டே அங்கு அழைத்து வந்தாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்