ஊர்காவற்துறையில் 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!

Date:

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் நேற்றிரவு (01) 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

11 வயதுடைய நிரஞ்சன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற சகோதரிகளே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரண்டு சிறுமிகளும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுமிகளைக் காணவில்லை என தேடிய நிலையில் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களும் காணப்பட்டன. இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்