அச்சுவேலியில் சிக்கிய கசிப்பு

Date:

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிசாரால் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிசாரின் சுற்றி வளைப்பில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, காஸ் சிலிண்டர், கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்