பெட்டி சரிந்து விழுந்து இளைஞன் பலி

Date:

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 4ஆம் வாட் பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்த பொருட்கள் அடங்கிய பெட்டி சரிந்து விழுந்ததில், அதில் அகப்பட்ட இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று (29)  இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சேர்நத 23 வயதுடைய எம்.ஜ.எம்.றிமாஸ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை மட்டக்களப்புக்கு ஏற்றிவரும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் வாகனங்கள் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தே பொருட்களை இறக்குவது வழக்கம். இன்று காலை  பெட்டிகளை ஏற்றி வந்த வாகனத்திலிருந்த பெட்டிகளில் சிலவற்றை பிறிதொரு வாகனத்திற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அதில் ஒரு பெரிய பெட்டி திடீரென சரிந்து விழுந்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சடலம் வழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்