மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த 2 ரௌடிகளுக்கும் விளக்கமறியல்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த ரௌடிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.

இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் வந்த ரௌடியிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.

இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய ரௌடி மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜூன் 11 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

300 வீட்டுத்திட்டம் நாவற்குழியை சேர்ந்த ஒருவரும், ராஜசிங்கம் வீதி, திருநகரை சேர்ந்த ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்