கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்… 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

Date:

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த பெண், தமரா பாங்க்ஸ். இவருடைய 4 வயது மகள் 2022 ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது மருத்துவ சோதனையில், கடுமையான நீரிழிவு நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பல பற்கள் அவள் இறக்கும்போது அழுகியிருந்தன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் 41 வயதான பாங்க்ஸ் – 53 வயதான கிறிஸ்டோபர் ஹோப் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், தமரா பாங்க்ஸ் – கிறிஸ்டோபர் ஹோப் தம்பதிக்கு இருந்த ஒரு மகன் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். மேலும், அவர் கண்டறியப்படாத நீரிழிவு நோயால் 4 வயதில் கோமாவில் விழுந்தார். தற்போது அவர்களின் இன்னொரு மகள் 4 வயதில் நீரிழிவு நோயால் இறந்திருக்கிறார்.

முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். சிறுமிக்கு 24 கிராமுக்கும் குறைவான சீனியே கொடுக்க வேண்டும். ஆனால், நியான்-கிரீன் சீனி கலந்த பேபி ஃபார்முலா போத்தல்களை அடிக்கடி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு போத்தலில் 77 கிராம் சீனி உள்ளது. ஜனவரி 2022இல் சிறுமி தீவிரமான மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நாள்கள் செல்லச் செல்ல சிறுமியின் நோய் மோசமடைந்திருக்கிறது.

ஜனவரி 2022 இல் சிறுமி “தீவிரமான மருத்துவப் பிரச்சினையால்” பாதிக்கப்பட்டபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி நீல நிறமாகி மூச்சு விடுவதை நிறுத்திய பிறகு அவளுடைய அம்மா 911 க்கு அழைத்தார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி, நீரிழிவு நோய் தொடர்பான மூளைக் காயம் மற்றும் பல்லைக் கரைத்த போத்தல் மூலம் சீனி கலந்த பானம் ஊட்டப்பட்டதால், சிறுமி இறந்தார் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.. அவள் ஒருபோதும் பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படவில்லை.

இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நீரிழிவு நோய் இருக்கும் மகளுக்கு மவுன்டைன் டியூ சோடாவை அதிக அளவில் கொடுத்ததால்தான் சிறுமியின் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. இந்தக் கொலைக்காக தமரா பாங்க்ஸ்க்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜூன் 11ஆம் திகதி கிறிஸ்டோபர் ஹோப்க்கும் தண்டனை அறிவிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்