மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

Date:

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து 72 பியர் ரின்கள், 25 கால் போத்தல் கொண்ட மதுபானங்களுடனான போத்தல்களை மீட்டதுடன் 42 வயதுடைய பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன் போது சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல வியாபாரியான 42 பெண் ஒருவரை கைது செய்ததுடன் பியருடனான 72 பியர் ரின்கள், கால் போத்தல்கள் கொண்ட மதுபானத்துடனான 25 போத்தல் மதுபானங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்