நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர் தம்மை இரு கைகளாலும் பிடித்து இழுத்து, உடலில் சாய்த்து, அங்க சேட்டையில் ஈடுபட்டு, தனது காதலை வெளிப்படுத்தியதாக திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய அலுவலக உதவியாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் எதிரொலியாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் இலக்கம் 02 நீதிமன்றத்திற்குச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சட்டத்தரணியான சந்தேக நபரை கைது செய்தனர்.
நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.