அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ முதல் தோற்றம் வெளியீடு!

Date:

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ எனும் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அஜித்தின் 63 வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இதனை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் படத்தின் முதல் தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது. இது படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த லுக் உள்ளது.

துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசை ஒன்றில் கை வைத்து நிற்கிறார் அஜித். பச்சை நிறத்திலான சட்டை அணிந்துள்ளார். கைகள் முழுவதும் டாட்டூ பதிக்கப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேமராவை சமத்தாக பார்க்கிறார். அவருக்கு இடப்பக்கம் உள்ள அஜித் கெட்டவன் போலவும், வலப்பக்கம் உள்ள அஜித் அக்லியாகவும் செய்கை செய்கின்றனர்.

“இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேன் பாயாக மட்டுமல்லாமல், ஃபேன் பாய் இயக்குநராகவும் தருகிறேன். யுனிவர்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்