இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கை படகுகள் ஐந்தை பறிமுதல் செய்துள்ள இந்திய கடலோர காவல்படை, அதிலிருந்த 14 இலங்கை மீனவர்களையும் கைது செய்துள்ளது.
நேற்று (16) இந்த சம்பவம் நடந்தது.
நாகப்பட்டினத்துக்கு அப்பாலான கடற்பகுதியில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் நாகப்பட்டினம் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
OFRP 2574 இலக்க படகில் பயணித்த- அப்துல் ரசாக் முகமது நாசர் (54) கிளிநொச்சி, நாச்சிக்குடா, சிநேரியஸ் சுகிர்தன் (40) மன்னார் தாழ்வுப்பாடு, நாகேந்திரன் ஸ்ரீ கிருஷ்ணன் (43) பருத்தித் துறை நாகர்கோயில் ஆகியோரும்,
யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட 4174 இலக்க படகில் பயணித்த- முகமது யூசப் பைரூஸ் (44) வெள்ளை மணல், கிஜிரா நகர், திருகோணமலை, அப்துல் ரசாக் நவ்ஷாத் (43) திருகோணமலை, வெள்ளை மணல், சையது முகமது இர்பான் (42) சிலாவத்துறை ஆகியோரும்,
யழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட OFRP-A-3984 இலக்க படகில் பயணித்த- சிமியோன் ஜக்கூர் (49, கொக்குப் படையான் , மன்னர், செய்னூதீன் அலாப்தின் (46) வெள்ளைமணல், திருகோணமலை, சையது முகமது எஸ்.எம்.எம்.உவய்ஸ் (59) திருகோணமலை கிண்ணியா ஆகியோரும்,
யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட 8101 இலக்க படகில் பயணித்த- அண்டனி பெரேரா தினுசன் (42), புத்தளம், மதுரங்குளி, எதிர்சிங் ரங்கன் பிரானுன் (42) சின்னப்பாடு ஆகியோரும்,
தனுஷ் மேரி 6863 இலக்க படகில் பயணித்த, ஆன்டனிஷேல்டன் சுமித் சஞ்சீவ் (37) பெரியபாடு, கொட்டன் தீவு, புத்தளம், டேனிஷ் லாவுஷ் ரஞ்சித் இந்திகர் (38 ) பெரிய பாடு,
கொட்டன் தீவு, புத்தளம், செபஸ்தியர் ஜமீந்தகுமார் (44) பள்ளிவாசல் பாடு, கொட்டன் தீவு ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.




