அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை ஏற்கவில்லையாம்: சொல்வது மஹிந்த

Date:

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்