‘எனக்கு ஆத்திரங்கள் வந்தது மக்களே’: ரூ.300க்காக தொழிலாளியை தாக்கிய வில்லங்க அமைச்சர்!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதேபோல், இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை அச்சுறுத்தியுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தனது மனைவி மற்றும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தனது மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த 14ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சர், அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் துப்பாக்கிகளுடன் பிரதான வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, ​​அமைச்சரின் பாதுகாவலர்களிடம் உள்ள துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

இதனால், விமான நிலைய பாதுகாவலர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சரின் மனைவியின் பயணப் பொதிகளை ஏற்றிச் சென்ற போர்ட்டர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய போர்ட்டருக்கு 1,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என விமான நிலைய அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்னணியில், அமைச்சர் 700 ரூபாய் கொடுத்ததற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் தொடர்பில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்ட்டரை அறைந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறியதுடன், குருநாகலைச் சேர்ந்த போர்ட்டர் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றார்.

அப்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இல்லாததால், மறுநாள் காலை போர்ட்டரை திரும்பி வருமாறு பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், அதன்பின்னர் அவர் பொலிஸ் நிலையம் செல்லவில்லை.

சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிடம் கேள்வியெழுப்பிய போது,

“அந்த நேரத்துல எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் கதைத்து அருகில் இழுத்துச் சென்றேன். நான் அவரை அறைந்தேன். அது உண்மைதான்.” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்