வாகரை காட்டுக்குள் கசிப்பு காய்ச்சியவர்கள் சிக்கினர்

Date:

மட்டக்களப்பு வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 3 பேர்கள் நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினால் இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவக்கைக்காக வாகரை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து 270 லீற்றர் கசிப்பு வடி சாராயமும் 9 கோடா பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கதிரவெளி அம்பந்தனாவெளி களப்பு பிரதேசத்தில் வைத்தே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்