யாழ்- நாகை கப்பல் சேவை தள்ளிப்போனது!

Date:

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு மே மாதம் 17ம் திகதி தொடக்கமே சேவைகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் குறித்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த செய்தி குறிப்பில், சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும்,தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட நாகை காங்கேசன் நாகை பயணிகள் கப்பல் சேவையினை 13/05/2024 முதல் 16/05/2024 இயக்கமுடியவில்லை.

சேவையினை 17/05/2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். 13/05/2024 முதல் 16/05/2024 பதிவு செய்த பயணிகளை 17/05/2024 சேவைக்கு மாற்றியுள்ளோம்.

பதிவு செய்த பயணிகள் 17/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்