மலையகம்

மஸ்கெலியா இளைஞன் மலேசியாவில் மரணம்!

மலேசியாவுக்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞன் அங்கு பொயிலர் வெடித்து மரணித்துள்ளார்.

மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இருந்து மலேசியாவில் உள்ள மினரல் வோட்டர் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பணிக்கு சென்றிருந்தார். இந்த அனர்த்தம், ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. அவரது சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள் நல்லடக்கம் ப்ரௌன்ஸ்வீக் மொன்டிஹம் பொது மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெறவிருந்தது.

அங்கு, அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது, ​​தவறி விழுந்ததில், வெந்நீர் இருந்த பொய்லரில் கை சிக்கி, பாய்லரில் இருந்த வெந்நீர், உடல் மீது விழுந்து, பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

சுடுநீரில் உடலின் பெரும்பகுதி எரிந்ததால் பலத்த காயங்களுடன் மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

Pagetamil

‘தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்’: ரூபன் பெருமாள் எச்சரிக்கை!

Pagetamil

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி!

Pagetamil

மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்!

Pagetamil

பரீட்சைக்கு வந்த 2 மாணவிகள் மாயம்!

Pagetamil

Leave a Comment