24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு பழிவாங்கும் தாக்குதல்!

கடந்த புதன்கிழமை அஹுங்கல்ல, லோகன்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையே நேற்று (10) அஹுங்கல்ல, மரதானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு என தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கீர்த்திசேன அப்ருவின் மகனும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ‘அஹுங்கல்ல பாபா’ என அழைக்கப்படும் நதீஷ் குமார அப்ரு நேற்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு தலைமை தாங்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல, மரதானை பகுதியில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய சிவனெட்டி பியல் காமினி என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டில் தங்கியிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடியதாகவும், அந்த நபர் 5 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று (10) இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் பலபிட்டிய நீதவான் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அஹுங்கல்ல – லோகன்வத்த பகுதியில் கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் பயன்படுத்திய ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் நேற்று (10) காலை கொஸ்கொட பொலிஸ் எல்லைக்குட்பட்ட வெலிபொத்த பிரதேசத்தில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment