10 நிமிடங்கள் அவசரப்பட்டவர் இடைநிறுத்தம்!

Date:

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத சாதரண தரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை நிலையம் ஒன்றில் உள்ள மாணவர்கள் சிலரிடம் விடைத்தாள்கள் பெறப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வலயக் கல்விப் பணிமனை, மேற்பார்வையாளராக கடமையாற்றிய வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோகர் ஒருவரை இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன், அந்த நிலையத்தில் உதவி மேற்பார்வையாளராக கடமையாற்றியவரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளதுடன், புதிதாக உதவி மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்