எம்.பியின் வீட்டில் முன்னறிவிப்பின்றி மின் துண்டிப்பு!

Date:

எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி நேற்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்வெட்டு தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது முந்தைய மாத மின் கட்டணம் ரூ. 12,000 மட்டுமே என்றும், திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்து, இது யாருக்கும் நடக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

“நான் பல இறுதிச் சடங்குகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொண்டேன், காலையில் வீடு திரும்பியபோது, எந்த அறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். எனக்கு இப்படி நேர்ந்தால், சாதாரண, அப்பாவி மக்களின் நிலை என்ன? இலங்கை மின்சார சபை பொறுப்புக்கூற வேண்டியதில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசாரணை நடத்தும் என அறிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்