2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியது தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்குக் காரணமான இருவர் இருப்பதாகவும், இருவரும் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபாத சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை வகிக்கின்றார், சுதந்திரக் கட்சியில் பதவியொன்றை ஏற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், ஆனால் கட்சியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா பவுண்டேஷனில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்