பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி நியமனம்

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட், ரி20 போட்டிகளுக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்தவருமான கேரி கிர்ஸ்டனும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லெஸ்பியையும் பயிற்சியாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இவர்களுடன் அனைத்து வடிவிலான போட்டிக்கும் துணை பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான அசார் முகமது செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் மே மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த தொடரில் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது. இதைத் தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்ன் மோர்க்கல், துடுப்பாட்ட பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் பாபர் அஸம் கப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து ஷாகீன் ஷா அப்ரிடி ஒருநாள் போட்டி மற்றும் ரி20-க்கு கப்டனாக நியமிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிக்கு ஷான் மசூத் கப்டனாக செயல்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் வழிகாட்டியாக செயல்பட்டார். ஆனால் அந்த பயணத்தில் டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 0-3 எனவும் ரி20 தொடரை 1-4 எனவும் இழந்ததால் முகமது ஹபீஸ் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஷாகீன் ஷா அப்ரிடி கப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் பாபர் அஸம் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து முழுநேர பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது. இதன் அடிப்படையில் தற்போது கேரி கிர்ஸ்டனும், கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்